டாக்டராகப்போகும் ஸ்மார்ட் போன்! என்ன வசதி எல்லாம் வரப்போகிறது தெரியுமா?

டாக்டராகப்போகும் ஸ்மார்ட் போன்! என்ன வசதி எல்லாம் வரப்போகிறது தெரியுமா?

தலைவலி, காய்ச்சல் என்றால் கூகுளில் தேடிவிட்டு எனக்கு டெங்குவாக இருக்குமோ, பிரெயின் ட்யூமராக இருக்குமோ என்று ஆளாளுக்கு சுய மருத்துவராகும் போக்கு அதிகமாக உள்ளது. இதை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் மருத்துவர்கள் விழிக்கிறார்கள்… அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் ஸ்மார்ட் போன்களையே மருத்துவராக்கும் முயற்சி நடந்துவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

phone

தற்போது ஸ்மார்ட் வாட்ச், பேன்ட் மூலம் நம்முடைய இதயத் துடிப்பு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. இந்த வசதிகளை மேம்படுத்தி ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதயத் துடிப்பு முதல் ஸ்டிரெஸ் வரை பல பிரச்னைகளை துல்லியமாக கணக்கிடுமாம். அதுமட்டுமின்றி, ஸ்மார்ட்போனை இதயம், வயிறு போன்ற முக்கிய உள் உறுப்புகள் உள்ள இடத்தில் வைத்தால், அது ரத்த ஓட்டத்தை அளவீடு செய்து, அதிர்வுகள் அடிப்படையில் பிரச்னை ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டிவிடுமாம். 

smartphone

இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் ஒருவரின் உடல்நலம் தினசரி கண்காணிக்கப்படும். இதனால், அவரது ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படும் என்கின்றது ஆய்வை மேற்கொண்டு வரும் ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம்.