டயாலிசிஸ் செய்த அம்மாவுக்கு மருந்து வாங்க முடியாமல், கண்ணீருடன் உதவி கேட்ட பெண்: மனதை உருக்கும் சம்பவம்!

 

டயாலிசிஸ் செய்த அம்மாவுக்கு மருந்து வாங்க முடியாமல், கண்ணீருடன் உதவி கேட்ட பெண்: மனதை உருக்கும் சம்பவம்!

கொரோனாவால் நாடு முழுவதும்  ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும்  ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெலகாவி பகுதியை சேர்ந்த பவித்ரா ஆரபவி(18) என்ற இளம்பெண்ணின் தாயாரின் சிறுநீரகம் செயல் இழந்ததால், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் கண்டிப்பாக தினமும் மாத்திரை சாப்பிடவேண்டுமாம். ஆனால் அந்த ஊரில் அவர் சாப்பிட்டு வந்த மருந்துக்கு ஊரடங்கால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

ttn

 அம்மாவுக்கு மருந்து வாங்க முடியாமல் திணறிய பவித்ரா, உதவி கேட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டார்.  அந்த வீடியோ வைரல் ஆகி கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கவனத்துக்கு சென்ற நிலையில்  அந்த பெண்ணுக்கு உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் படி, நேற்று முன்தினம் பவித்ராவின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் அவரின் தாயாருக்கு தேவையான மருந்துகளை வழங்கியுள்ளனர். இச்சம்பவம் பலரின் மனதை கணக்க செய்துள்ளது.