‘டயல் ஃபார் வாட்டர் 2.0’… பதிவு செய்த 2 நாட்களில் தண்ணீர் தேடி வரும்…. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் அதிரடி!

 

‘டயல் ஃபார் வாட்டர் 2.0’… பதிவு செய்த 2 நாட்களில் தண்ணீர் தேடி வரும்…. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் அதிரடி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  பல இடங்களில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  பல இடங்களில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டன.

இதனால் பொது  மக்கள் குடிநீருக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழைக் காலங்களில்  ஏரி  குளங்களைத் தூர்வாரி இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையே இருந்திருக்காது என ஒரு தரப்பினர் புலம்பி வருகின்றனர். 

இந்நிலையில்  சென்னையில் தண்ணீர் லாரிக்காக மக்கள் காத்திருக்க தேவையில்லை எனவும், பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் வழங்கப்படும் ‘டயல் ஃபார் வாட்டர் 2.0’ என்ற திட்டத்தை சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பு தண்ணீர் லாரிக்கு புக்கிங் செய்துவிட்டு 10 நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு பிறகுதான் அடுத்த முன்பதிவை செய்யமுடியும் என்று, அப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு 48 மணிநேரத்திற்குள் தண்ணீர் வழங்கப்பட்டுவிடும் என சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.தண்ணீர்

தனி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், போன் மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ புக்கிங் செய்யலாம். தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட பின்புகூட பணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. 3,000 லிட்டர் தண்ணீர் பதிவு செய்பவர்கள் காலை ஆறு மணி முதலும், 6000 லிட்டர் தண்ணீர் பதிவு செய்பவர்கள் காலை 8 மணிக்கும், 9000 லிட்டருக்கு காலை 10 மணிமுதலும், 12 முதல் 16 ஆயிரம் லிட்டர் வரை தேவைப்படுவோர்கள் மதியம் 12 மணிக்கு பிறகும் முன்பதிவு செய்யலாம் என்றும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.