டம்டம் பாறை வனப்பகுதிகளில் திடீரென பற்றிய காட்டுத்தீ : அபாயத்தில் இருக்கும் வனவிலங்குகள் !

 

டம்டம் பாறை வனப்பகுதிகளில் திடீரென பற்றிய காட்டுத்தீ : அபாயத்தில் இருக்கும் வனவிலங்குகள் !

லங்குகளைக் காப்பாற்றச் சென்ற தீயணைப்புத் துறையினரை அங்கிருந்த  விலங்குகள் கட்டி அணைத்துக் கொண்ட சம்பவங்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்கா.

சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பரவி வந்த காட்டுத்தீ பல வனவிலங்குகளின் இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்தது. இந்த தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான விலங்குகள் உடல் கருகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விலங்குகளைக் காப்பாற்றச் சென்ற தீயணைப்புத் துறையினரை அங்கிருந்த  விலங்குகள் கட்டி அணைத்துக் கொண்ட சம்பவங்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்கா.

ttn

அங்கு மழை பெய்யாதா.. மீதமுள்ள விலங்குகள் காப்பாற்றப் படாதா என்ற பலரின் பிரார்த்தனை நிறைவேறி மழை பெய்து தீ கட்டுக்குள் வந்தது. இதே போல, தமிழகத்திலும் பரவி வரும் காட்டுத் தீயினால் விலங்குகள் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 

ttn

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது டம்டம் வனப்பகுதி. இந்த இடத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அந்த வனப்பகுதிகளில் ஆண்டு தோறும் கோடைக்காலத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இரண்டு மாதத்திற்கு முன்பாகவே காட்டுத்தீ பரவ தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் இருக்கும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் தீக்கு இறையாகின்றன. குளிர்காலத்தில் அதிக பனிப்பொழிவு இருப்பினும் தீ பரவி வருகிறது. 

ttn

இந்த காட்டுத்தீ மேலும் பரவி அங்கிருக்கும் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டதை போல இங்கும் நடக்கக் கூடாது என்றும் பரவி வரும் காட்டுத்தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருமாறும் வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.