டப்பிங் யூனியன் தேர்தல்…ராதாரவியை எதிர்த்து பிரசாரம் செய்ய தேர்தல் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் சின்மயி

 

டப்பிங் யூனியன் தேர்தல்…ராதாரவியை எதிர்த்து பிரசாரம் செய்ய தேர்தல் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் சின்மயி

 ராதாரவியை எதிர்த்து பிரசாரம் செய்ய தேர்தல் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அத்துடன் அங்கு செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார். 

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது   ராதாரவி – சின்மயி மோதலுக்கு  வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள்  இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து  ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  

 

இருப்பினும் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரியான  ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.ரவி அறிவித்தார்.

 

 

இந்நிலையில் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அவிச்சி பள்ளியிலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள AKR மஹால் திருமண மண்டபத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்  ராதாரவியை எதிர்த்து பிரசாரம் செய்ய தேர்தல் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அத்துடன் அங்கு செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார். 

ttn

ராதாரவி அணிக்கு எதிராக போட்டியிடும் ராமராஜ்யம் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக நாசர் போட்டியிட  உள்ளது குறிப்பிடத்தக்கது.