டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

 

டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் டப்பிங்கில் நடிகர் சிம்பு கதறி அழுத வீடியோ வெளியானது.

சென்னை: ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் டப்பிங்கில் நடிகர் சிம்பு கதறி அழுத வீடியோ வெளியானது. 

நடிகர் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் வெளியான அத்திரண்டிகி தாரேதி திரைப்படத்தைத் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடத்துத்திருந்தார்.

vrv

மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில்,இப்படத்தில் சிம்பு க்ளைமேக்ஸ் கட்சியின் டப்பிங் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு தனையும் மீறி அழுகிறார். அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளதால் சிம்பு ரசிகர்கள் அந்த விடியோவை  தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.