ஞாயிறு அன்று மூடப்படவுள்ள கோயம்பேடு மார்க்கெட்!

 

ஞாயிறு அன்று மூடப்படவுள்ள கோயம்பேடு மார்க்கெட்!

தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 2 லட்சத்து 44ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ தாண்டியது.  இந்தியாவில் இந்த வைரசால் 194  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பஞ்சாபில் மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. 

ttn

இதையடுத்து  கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “22 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு.  அத்தியாவசிய வேலைகளில்  பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ttn

இந்நிலையில்  மோடியின் மக்கள் ஊரடங்கு கோரிக்கையை ஏற்று, கோயம்பேடு காய்கறி மற்றும் பழ அங்காடி நாளை மறுநாள் ஞாயிறு அன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.