ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படும் குடிநீர் இன்று முதல் நிறுத்தம் .!?

 

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படும்   குடிநீர் இன்று முதல் நிறுத்தம் .!?

தமிழக அரசு 65 கோடி ரூபாய் செலவில் காவிரி குடிநீர் திட்டத்தின் உபரி நீர், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாகக் கொண்டு வரப்பட்டு சென்னையில் உள்ள மக்களுக்கு  விநியோகிக்கப்பட்டது. 

கோடைக்காலத்தின் துவக்கம் முதல், தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்கு குறை ஏற்பட்டது. குறிப்பாக, சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆங்காங்கே மக்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காகப் போராட்டத்திலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதனைத் தடுப்பதற்காக, தமிழக அரசு 65 கோடி ரூபாய் செலவில் காவிரி குடிநீர் திட்டத்தின் உபரி நீர், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாகக் கொண்டு வரப்பட்டு சென்னையில் உள்ள மக்களுக்கு  விநியோகிக்கப்பட்டது. 

Jolarpettai train

இதனால், சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சம் ஓரளவுக்குச் சமாளிக்கப்பட்டது. சென்னையில் துவங்கிய மழையின் காரணமாகத் தண்ணீர் பஞ்சம் தற்போது குறைந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படும் ரயிலின் சேவை, இன்றோடு நிறுத்தப்படுகிறது. இதுவரை, அந்த ரயில் சென்னைக்கு 159 முறை, 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Jolarpettai train