ஜோத்பூர் கோட்டையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம்?

 

ஜோத்பூர் கோட்டையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம்?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் கோட்டையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் கோட்டையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

priyankachopra

திரையுலகில் முக்கிய பிரபலங்கள் பலர், குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து, நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் தங்களது திருமணத்தை செய்துக் கொள்கின்றனர். டெஸ்டினேஷன் வெட்டிங் என்றழைக்கப்படும் இதுபோன்ற திருமணம் தமிழ் நடிகை சமந்தாவுக்கு கோவாவிலும், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட்-அனுஷ்கா திருமணம் இத்தாலி நாட்டிலும் நடைபெற்றது.

viratanushka

இவர்களை தொடர்ந்து நவம்பர் மாதம் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணமும் இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரியங்கா-நிக் ஜோனஸ் ஜோடியும் டெஸ்டினேஷன் வெட்டிங்கிற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’மெஹ்ரான்கர்’ கோட்டையை திருமணத்துக்கு தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.

mehrangarahfort

திருமணத்துக்காக நவம்பர் மாதம் நடுவில் இந்தியா வரும் நிக் ஜோனஸ் தனது காதலி பிரியங்கா சோப்ராவை இந்திய-மேற்கத்திய கலாச்சாரத்தின் படி திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. திருமண தேதி குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.