ஜோதிமணி விவகாரம்: இனி கூட்டணி கட்சிகள் பாஜகவினர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்- காங்கிரஸ்

 

ஜோதிமணி விவகாரம்: இனி கூட்டணி கட்சிகள் பாஜகவினர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்- காங்கிரஸ்

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார்.

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஜோதிமணி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக #IStandwithJothimani என்ற ஹேஷ்டாக் இணையத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. பலரும் பாஜக கரு.நாகராஜனுக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். மேலும் அவர் ஜோதிமணியிடம் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

rr

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோதிமணி அவர்களை தரக்குறைவாக கரு.நாகராஜன் பேசுவதற்கு தனியார் தொலைக்காட்சி நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது. வரம்பு மீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையிலிருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம். தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் ஜோதிமணி அவர்களை தரம் தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் தனியார் தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்.

​ ​தமிழக காங்கிரஸ்

எனவே பாஜகவினர் பங்கேற்கும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிட கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சியைச் சேந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.