ஜோதிட அடிப்படையில் யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு ?

 

ஜோதிட அடிப்படையில் யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு ?

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு இருக்கிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

ஜோதிடத்தில் வெளிநாடு, வெளிமாநிலம், முஸ்லிம், கிறித்துவ நாடுகள், வேறு மொழிகள், முற்றிலும் அந்நியமான தன்மைகள் போன்றவற்றைக் குறிக்கும் ராகு,கேதுக்கள் ஜலராசி எனப்படும் சந்திரனின் வீடான கடகத்தோடு தொடர்பு கொள்கையில் அந்த ஜாதகரின் வயதையொட்டி படிப்பிற்கோ, வேலைக்கோ, திருமண வாழ்விற்காகவோ, பேரன்,பேத்திகளைப் பார்க்கவோ வெளிநாட்டிற்கு செல்வார்கள்.

foreign Travel

எனவேதான் வெளிநாட்டினைக் குறிக்கும் எட்டு, பனிரெண்டாமிடங்கள் மற்றும் வெளிதேச வாசத்தைக் குறிக்கும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் மற்றும் அஷ்டமாதிபதி, விரயாதிபதி மற்றும் சந்திரனின் தொடர்புகளைப் பெறும் போது இருக்கும் இடத்தின் தன்மைகளை அப்படியே செய்யும் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் வெளிநாட்டுத் தொடர்புளைச் செய்கின்றது.

ஜோதிடத்தில் மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள். காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும். காற்று ராசியும் நீா் ராசியும் 9 12 அதிபதிகளுடன் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் கிடைக்கும்.

foreign travel

சந்திரதசை, ராகுதசை, சனிதசை, சுக்கிரதசை, நடக்கும் போது வெளிநாட்டு பயணம் ஏற்படலாம். ஜாதக ரீதியாக,3,7,9,12 ஆகிய வீட்டில் இருக்கும் கிரகங்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பது. இத்தகைய தசா காலங்களில் அவர்களே எதிர்பாராத வகையில் வேலைபார்க்கும் நிறுவனம் மூலம் கூட வெளிநாடு செல்லலாம். 

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் உண்டாகும்.

சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது.

foreign travel

ஒருவரின் ஜாதகத்தில் 3ஆம் வீடு சிறிய பயணத்தைக் குறிக்கும். 9ஆம் வீடு நீண்ட பயணத்தையும், 12ஆம் வீடு வெளிநாட்டு பயணத்தையும் குறிக்கும். 9 12ம் அதிபதிகள் 8ம் வீட்டில் அமா்ந்தாலும் 8ம் அதிபதியோடு தொடா்பு கொண்டாலும் மறைவு தேசங்களில் வாழ நோிடும்.

ஜாதகத்தில் 4ஆம் இடம் கல்வியைக் குறிக்கிறது. எனவே 4ஆம் அதிபதியும், வெளிநாட்டு பயணத்திற்கு காரணமான 12ஆம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது அவர்களின் தசாபுத்தி காலத்தில் கல்வி சார்ந்த வெளிநாட்டு பயணம் அமையும்.

foreign travel

5ஆம் அதிபதியும், 12ஆம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் தசாபுத்தி காலத்தில் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்லலாம்.9ஆம் வீடு அல்லது 12ஆம் வீட்டில் ராகுவோ, சனியோ இருந்து 9 அல்லது 12ஆம் அதிபதி சேர்க்கை இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.