ஜோதிடம் என்பது உண்மையா… பொய்யா…

 

ஜோதிடம் என்பது உண்மையா… பொய்யா…

பஞ்ச பாண்டவர்களின் ஒருவனான சகாதேவன், காலத்தை உணர்ந்தவன் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். எல்லோராலும் கொண்டாடப்பட்டதில் சகாதேவனுக்கு, தன்னால் காலத்தை உணர முடியும். தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்று ஆணவம் ஏற்பட்டு கர்வம்அதிகமாகி விட்டது. 

astrology

துரியோதனன், பாண்டவர்களைஅழிப்பதற்கு,போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க, சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில் தான், கர்ணன் தன் உடன் பிறந்தவன் என்ற உண்மை சகாதேவனுக்குத் தெரிய வருகிறது. இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்துக் கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். 

pandavar

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து,‘கிருஷ்ணா ஜோதிடம் என்பது  பொய் தானே?’ என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன், ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா? என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என்னுடைய கணிதத் திறமையால் தெரிந்துக் கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கிருஷ்ணரிடம் அதே கேள்வியை எழுப்பினான் சகாதேவன். 

krishnar

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணர் குதர்க்கமாக சிரித்தார். 
சகாதேவா.. அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகுநான் எதற்கு? என்றார்.இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில். அதனால் ஜோதிடத்தில் நம்பிக்கையை வைத்து காலத்தை வீணாக்காமல் கடவுள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.