ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்பட பிரச்சினையை தீர்க்க அரசு உதவி செய்யும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்பட பிரச்சினையை தீர்க்க அரசு உதவி செய்யும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இனி சூர்யா தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளுக்கு தேவையில்லை எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ponmagal vandhal

இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவது தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்படும் திரையரங்கு உரிமையாளர்கள், அவர்கள் கருத்தினை கூறியுள்ளனர். இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்சினை. இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன், இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்சினை. இரு தரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும். முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படு” எனக்கூறினார்.