ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் இரண்டு கால்களை இழந்த இளைஞர் : மிரள வைக்கும் வீடியோ!

 

ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் இரண்டு கால்களை இழந்த இளைஞர் : மிரள வைக்கும் வீடியோ!

மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் ஜொமோட்டோ நிறுவனத்தில்  டெலிவரி பாயாக வேலைசெய்து வருவது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான்: மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் ஜொமோட்டோ நிறுவனத்தில்  டெலிவரி பாயாக வேலைசெய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் நம் மக்களின்   அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகி விட்டன. அதிலும், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற முறை வந்த பிறகு, எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் உணவு வரை நமக்குத் தேவையான அனைத்து  பொருட்களுமே நம் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

zomato

அதிலும் குறிப்பாக, தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி, டெலிவரி செய்வதற்கு ‘டெலிவரி பாய்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் இரவு பகல்  பாராமல் உழைத்து வருகின்றனர்.  சாமானிய மனிதனுக்கு இந்த வரிகள் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்  இது போன்ற கடினமான உழைப்பில் மாற்றுத்திறனாளிகளும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தான் இந்த செய்தி உணர்த்துகிறது. 

 

ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள பீவார் என்ற பகுதியில் இரண்டு கால்களும் செயல்படாத ராமு என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிகிறார். 40 டிகிரி வெயில் மூன்று சக்கர வாகனத்தில் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் இவரது வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது. மிடறு திறனாளியின் குறைகளைப் பார்க்காமல் அவரின் கடின உழைப்பை மற்றும் கண்டு வேலை கொடுத்துள்ள ஜொமோட்டோ நிறுவனத்திற்குப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ இது போன்ற கடுமையான உழைப்பாளிக்கு பேட்டரியில் இயங்கும் வாகனத்தைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து கூறி வருகின்றனர். 

மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பலர் நல்ல நிலையில் இருப்பவர்களை விட தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பலருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.