ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!

 

ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!

ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜொமோட்டோ நிறுவனம் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது. 

புதுச்சேரி:  ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜொமோட்டோ நிறுவனம் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது. 

`ஜொமோட்டோ’ ஊழியருக்கு நடந்த கொடுமை 

 

உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

புதுச்சேரி வணிக வளாகம் ஒன்றினுள் நுழைந்த ஜொமோட்டோ ஊழியர் ஒருவரை  வணிக வளாக ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தி நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்று வாக்குவாதம் செய்ய, அந்த டீ ஷர்ட்டை நீங்கள் கழற்றிவிட்டால் உங்களுக்கு இங்கு தனி மரியாதை கிடைக்கும் என்று பேசி கொண்டிருக்கும் போதே,  அங்கு வந்த  மற்றொரு நபரோ, உன்னை யார் உள்ளே வர சொன்னது? உன் ஆர்டரே வேண்டாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினார். இந்த விடீயோவானது சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.

பணி நீக்கம் செய்த நிறுவனம் 

zomato

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள ஜொமோட்டோ ஊழியர் அசோக், நான் சில மாதங்களுக்கு முன்பு ஜொமோட்டோநிறுவனத்தில் பணிக்குச் சென்றேன். சம்பவம் நடந்த அன்று நான் அந்த வீடியோவை,  ஃபேஸ்புக்கில் போட்டவுடன், ஜொமோட்டோ மற்றும் மால் தரப்பிலிருந்து என்னை அழைத்து சமாதானம் பேச அழைத்தார்கள். அதனால் நான் சென்றேன். அப்போது உன்னிடம் மன்னிப்பு கேட்க அழைக்கவில்லை. ஒழுங்காக வீடியோவை டெலிட் செய்து விடு என்றார்கள். இதனிடையில்  என் டீம் லீடர் எனக்கு போன்செய்து, ’ரிஸைன் பண்ணிட்டு டீ-ஷர்ட்டை கொடுத்துட்டுப் போ’ என்றார். நானும் உடனடியாக வேலையை ரிஸைன் பண்ணிட்டேன்.

குறைந்தபட்ச மரியாதையைக் கூட தருவதில்லை

zomato

மறுபடியும் ஜொமோட்டோவில் இருந்து போன் செய்து வீடியோவை டெலிட் செய்ய சொன்னார்கள். ஆனால்  வேலையை ரிஸைன் செய்த பிறகு எனக்கு கண்டிஷன் போடுறது நீங்க யாரு? என்றேன், அதற்கு உன் மீது கேஸ் போடுவோம் என்றார்கள், போட்டு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை கட்  செய்து விட்டேன். எனக்கு மட்டுமல்ல எங்களை போன்ற எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. நான் அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டேன். நாங்கள் பணிபுரியும் இடத்திலும் சரி, இது போன்ற பெரிய மால்களிலும் சரி எங்களுக்கு குறைந்தபட்ச மரியாதையைக் கூட தருவதில்லை’ என்று வேதனை தெரிவித்துள்ளார். 

அவர்கள் வருவதற்கென்று தனி வழி உள்ளது

zomato

அதே சமயம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மால் நிர்வாக மேலாளர், அது அவர்களுக்கான வழி இல்லை. அவர்கள் வருவதற்கென்று தனி வழி உள்ளது. ஆனால்  இது குறித்து அந்த நபரிடம் எடுத்து கூறியும் அவர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு வந்து பிரச்னை செய்தார். இது குறித்து ஜொமோட்டோ நிறுவனம், அந்த ஊழியரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டோம் என்று கூறி, வருத்தம் தெரிவித்தது’ என்று விளக்கமளித்துள்ளார். 

இதையும் வாசிக்க: ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!