ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் : மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்

 

ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் : மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்

கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்ம நபர்கள் சிலர்  ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கினர். அதில், பல பேர் படுகாயமடைந்தனர். 

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்திய போது, போலீசார் இவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும்,கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்ம நபர்கள் சிலர் டெல்லி  ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கினர். அதில், பல பேர் படுகாயமடைந்தனர். 

ttn

குடியுரிமை சட்டத்திருத்த போராட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், திமுக   இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். உதயநிதியுடன் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை சந்தித்து பேசிய உதயநிதி, பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர் அணி நிர்வாகிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.