ஜே.என்.யு தாக்குதல் எதிரொலி… அலிகார் பல்கலைக்கு விடுமுறை!

ஜே.என்.யு தாக்குதல் எதிரொலி… அலிகார் பல்கலைக்கு விடுமுறை!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்துக்குள் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மீண்டும் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உத்தரப்பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

jnu-protest

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்குள் முகமூடி அணிந்த சிலர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பாரதிய ஜனதாவின் ஏ.பி.வி.பி மீது அனைவரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மும்பையில் மாணவர்கள் கேட் வே ஆஃப் இந்தியா முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
உத்தரப்பிரதேசம் அலிகார் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், போராட்டம் வலுப்பெறும் என்று கருதி அங்கு அதிக அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

amu protest

இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் நிர்வாக குழு இன்று காலை அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. இதன் பிறகு பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி ஓமர் சலீம் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தற்போதய சூழ்நிலையைப் பற்றி இன்றைய கூட்டத்தில் தீவிரமாக விவாதித்தோம். கூட்டத்தில் குளிர்கால விடுமுறையை இன்னும் சில தினங்களுக்கு நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், இன்று பல்கலைக் கழகம் தொடங்காது. எப்போது தொடங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். பல்கலைக் கழக வளாகத்துக்குள் நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றார்.