ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு!

ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு!

சென்னை செம்மேஞ்சேரியில் இயங்கி வரும் சத்யபாமா கல்லூரியை நிறுவிய ஜேப்பியார் என்ற நபர், பனிமலர் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.

சென்னை செம்மேஞ்சேரியில் இயங்கி வரும் சத்யபாமா கல்லூரியை நிறுவிய ஜேப்பியார் என்ற நபர், பனிமலர் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.

IT Raid

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜேப்பியார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த கல்வி குழுமத்தை எடுத்து நடத்தும் அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து அந்த ஆண்டே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் லட்சக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மீண்டும் வரிஏய்ப்பு நடந்ததாகக் கிடைத்த தகவலையடித்து கடந்த 7 ஆம் தேதியிலிருந்து வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 130 வருமான வரித்துறையினர் சேர்ந்து சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு உட்பட்ட 30 இடங்களில் சோதனையிட்டனர். 

TTN

4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.