ஜேஜூ தீவில் புயல் காற்று, 17,000 குடும்பங்கள் பாதிப்பு!

 

ஜேஜூ தீவில் புயல் காற்று, 17,000 குடும்பங்கள் பாதிப்பு!

தென்கொரியாவில் ஜேஜூ தீவில் கடந்த சில தினங்களாக கடும் புயல் காற்று வீசி, பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் சூரைக்காற்று காரணமாக மரங்கள் வேரோடு பெயர்ந்தது மட்டுமல்லாது மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அந்த பகுதிகளில் சுமார் 17ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஜேஜூ தீவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

தென்கொரியாவில் ஜேஜூ தீவில் கடந்த சில தினங்களாக கடும் புயல் காற்று வீசி, பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் சூரைக்காற்று காரணமாக மரங்கள் வேரோடு பெயர்ந்தது மட்டுமல்லாது மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அந்த பகுதிகளில் சுமார் 17ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஜேஜூ தீவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சூறாவளி காற்று வீசி வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கையாக 89விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தலைநகர் சியோல் அருகே வசித்து வந்த 38 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

jeju island

இந்நிலையில், மேற்கு கரையோரம் புயல் கரையை கடந்து இன்று மாலை வடகொரியாவை அடைய உள்ளதால், எல்லையோரம் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.