ஜெ’ வாழ்க்கை கதையை படமாக்கும் அரை டஜன் இயக்குநர்கள்… டார்ச்சராகும் சசிகலா கதாபாத்திரம்!

 

ஜெ’ வாழ்க்கை கதையை படமாக்கும் அரை டஜன் இயக்குநர்கள்… டார்ச்சராகும் சசிகலா கதாபாத்திரம்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கோடம்பாக்கத்தில் அரைடஜன் இயக்குநர்கள் படமாக்கி வருகிறார்கள். ஒருத்தருக்கு இன்னொருத்தர் சளைத்தவர் இல்லை என்று ஆளாளுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது படத்தைப் பற்றி பஞ்சாயத்து கூட்டி, அறிவிப்பு வெளியிட்டு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் ஏ.எல். விஜய் மும்முரமாக வேலைப் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் அனுமதி பெற்று முறையாக பட வேலைகளைத் துவங்கியிருக்கும் ஏ.எல்.விஜய் சசிகலாவின் கதாபாத்திரத்திற்கு கண்ணியம் சேர்த்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கணா நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கோடம்பாக்கத்தில் அரைடஜன் இயக்குநர்கள் படமாக்கி வருகிறார்கள். ஒருத்தருக்கு இன்னொருத்தர் சளைத்தவர் இல்லை என்று ஆளாளுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது படத்தைப் பற்றி பஞ்சாயத்து கூட்டி, அறிவிப்பு வெளியிட்டு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் ஏ.எல். விஜய் மும்முரமாக வேலைப் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் அனுமதி பெற்று முறையாக பட வேலைகளைத் துவங்கியிருக்கும் ஏ.எல்.விஜய் சசிகலாவின் கதாபாத்திரத்திற்கு கண்ணியம் சேர்த்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கணா நடிக்கிறார்.

al vijay

லிங்குசாமி வேகவேகமாக ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தைப் பற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அவருடைய தற்போதைய பொருளாதார நிலைமை சசிகலாவை விட மிக மோசமாக இருப்பதாக தகவல் சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர் அறிவிப்பை வெளியிட்டு வருஷங்கள் கடந்த பிறகும் எந்த தயாரிப்பாளரும் அவர் இருக்கும் பக்கம் கூட  போன வெயிலுக்கும் ஒதுங்கவில்லை. இந்த மழைக்கும் ஒதுங்கவில்லை. அதனால் அநேகமாக ஜெயலலிதாவின் பட ஆட்டத்தில் இப்போதைக்கு லிங்குசாமி கிடையாது.

lingusamy

அடுத்து மும்பையில் உள்ள ஒரு பெரிய ஃபைனான்ஸியர் சென்னைக்கு வந்து, `நீங்கள் ஜெ மேடம் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கித் தரவேண்டும்; அந்தப் படத்துக்கு எத்தனை கோடிகள் பட்ஜெட் செலவானாலும் பரவாயில்லை’ என்று பாரதிராஜாவிடம் கேட்டனர். முதலில் சம்மதம் சொன்னவர். அதன்பிறகு, `எம்.ஜி.ஆர், கருணாநிதியைத் தவிர்த்து விட்டு ஜெ வாழ்க்கையைப் படமாக்க முடியாது. ஜெ- தோற்றம் உள்ள நடிகையை செலக்ட் செய்துவிடலாம். எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜி போன்ற தோற்றம் உள்ளவர்களை கண்டுபிடித்து நடிக்கவைப்பது எளிதான காரியமல்ல’ என்று ஜெ பயோபிக் எடுப்பதைத் தவிர்த்துவிட்டார், பாரதிராஜா.

bharathiraja

ஏற்கெனவே எடுத்த ஒன்றிரண்டு படங்களும் பஞ்சாயத்தில் சந்தி சிரித்து ரிலீஸாகாமல் கிடக்கிறது. வேறு எந்த நடிகரும் ஏமாற முன்வராததால் வேறு வழியில்லாமல் வெளிநாட்டு பண முதலைகளைக் குறி வைத்து பணம் கொழிக்கும் ‘வெப் சீரிஸ்’ பக்கம் ஒதுங்கியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன் கெளதம் மேனன் இயக்கி வரும் `குயின்’ வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கப் போவதாக அறிவித்து, இயக்கி வருகிறார். 
 

priyadharshini

`குயின்’ வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்குகிறார். இன்னொரு பக்கம் சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் `கிடாரி’ பிரசாத் முருகேசன் டைரக்‌ஷன் செய்கிறார். கெளதம் மேனன் இயக்கி வரும் ஜெ பயோபிக்கில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் ஒருநாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் சம்பளமாம்.

gautham and ramya

ஜெ நடிகையாக இருந்தபோது போயஸ் கார்டன் வேதா இல்லம் பழைய மாடலில் இருந்தது. இப்போது நவீனமயமாக இருப்பதால் அதேபோன்று பழைமை மாறாத தோற்றம் கொண்ட பங்களா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் இருக்கிறது. ஜெ இளமைத் தோற்றமுடன் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் சினிமா வாழ்விலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனை உண்டாக்கியவர் எம்.ஜி.ஆர். அவரின் கதாபாத்திரத்தை மலையாள நடிகர் பிருதிவிராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்து இருக்கிறார். முக்கியமாக சசிகலா கதாபாத்திரம் இந்த பயோபிக்கில் இல்லையாம். ஏற்கெனவே நிறைய பேர் ஜெயலலிதா படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாலும், இருக்கிற கடன் பிரச்சனை, கோர்ட் பஞ்சாயத்துக்களால் தன்னுடைய படங்கள் ரிலீஸாகாமல் தவிப்பதைப் போல சட்டச் சிக்கலால் வெப் சிரீஸுக்கும் பிரச்சனை வரக்கூடாது என்று சசிகலா கதாபாத்திரத்தைத் தவிர்த்து விட்டாராம் கெளதம் மேனன்.
இப்படி சசிகலா கதாபாத்திரத்தை சிதறு தேங்காயாய் சில்லு சில்லாய் உடைத்து விட்டு, ஜெ பயோபிக் படத்தை இயக்கி வருகிறார்கள் இயக்குநர்கள்.