ஜெ. சொத்து எல்லாம் எனக்கே சொந்தம்… சசிகலாவின் பயங்கர விளக்கம்

ஜெ. சொத்து எல்லாம் எனக்கே சொந்தம்… சசிகலாவின் பயங்கர விளக்கம்

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினருக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள், சொத்துக்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்ததாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜெயிலில் இருந்த சசிகலாவுக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 11ம் தேதி இறுதி விளக்க அறிக்கையை சசிகலா கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியுள்ள தகவல்கள் பல அதிர்ச்சி ரகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட எல்லா சொத்துக்களுக்கும் தற்போது நானே உரிமையாளர்” என்று வருமான வரித்துறைக்கு சசிகலா விளக்கம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினருக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள், சொத்துக்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்ததாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜெயிலில் இருந்த சசிகலாவுக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 11ம் தேதி இறுதி விளக்க அறிக்கையை சசிகலா கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியுள்ள தகவல்கள் பல அதிர்ச்சி ரகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

kodanadu-estate

சசிகலா அளித்த விளக்கத்தின் படி, ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக இருந்த நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், ஜெயா ஃபார்ம் அவுஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் சசிகலா பங்குதாரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட நான்கு சொத்துக்களில் ஜெயலலிதா மரணம் அடையும் வரை பங்குதாரராக இருந்ததாகவும், அவர் மரணத்துக்குப் பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு, அதன் மொத்த உரிமையும் சசிகலாவிடம் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் 41 லட்சத்து 66 அயிரம் பங்குகள், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3.6 லட்சம் பங்கு, மேவிஸ் சாட்காமில் 7.02 பங்கு, ராம்ராஜ் அக்ரோமில்ஸில் 36 ஆயிரம் பங்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதன் மூலம் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பது உறுதியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சொத்து பட்டியல் கிடைத்துவிட்டது இதை வைத்து அரசு மற்றும் வருமான வரித்துறை என்ன செய்யப்போகிறது என்பது பில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.