ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசார் மரணம்?!

 

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசார் மரணம்?!

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் மரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் மரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்_இ_முகமது எனும் தீவிராத அமைப்பு, இதன் தலைவனாக செயல்பட்டு வந்தவன் மசூத் அசார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் இருப்பது தெரிந்தும் அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய அரசு குற்றம்சாட்டியது. அதன்பிறகு இந்தியா தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் – இந்தியா இடையே போர் நிகழும் சூழல் உருவானது. இரு நாடுகளுக்கிடையே விமானப்படை தாக்குதல் நடந்தது, அபிநந்தன் எனும் இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டு பின் பாக் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஜெய்ஷ்_இ_முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உடல்நிலை சரியில்லாததால் வீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை என்ற தகவலை பதிவு செய்திருந்தார்.

சிறுநீரக பாதிப்படைந்த மசூத் அசார், ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மசூர் அசார் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.