ஜெயில் சாப்பாடு நல்லா இருக்கு! சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் திருடிவிட்டு ஜெயிலுக்கு போன வித்தியாச திருடர்!! 

 

ஜெயில் சாப்பாடு நல்லா இருக்கு! சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் திருடிவிட்டு ஜெயிலுக்கு போன வித்தியாச திருடர்!! 

சென்னை மேற்கு தாம்பரம், கைலாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டுச் சென்றார்.

சென்னை மேற்கு தாம்பரம், கைலாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஸ்வரன், பல இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 

இந்த வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் தேவிகா, ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தெரு ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த பைக்கிடமிருந்து ஒருவர் பெட்ரோல் திருடியுள்ளார். உடனே அவரை பிடித்து விசாரிக்கும்போது நான் வந்த பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது அதனால் தெருவோரம் நின்றிருந்த பைக்கில் பெட்ரோல் திருடினேன் என ஓபனாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பைக்கோடு அந்த பெட்ரோல் திருடனை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அது விக்னேஸ்வரனின் பைக் என்று தெரியவந்தது. 

உடனடியாக பெட்ரோல் திருடிய நபரிடம் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவர், என் பெயர் ஞானபிரகாசம், எனது ஊர் பெருங்களத்தூர் என கூறியுள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதம் சி.சி.டி.வி. கேமராவைத் திருடிய வழக்கில் தாம்பரம் போலீஸார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், அதன்பின் வெளியே வந்து விக்னேஸ்வரனின் பைக்கை திருடியதாகவும் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி,தனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாகவும், ஆனால் வீட்டில் எண்ணையாரும் மதிக்கவில்லை அதனால் திருட்டு தொழிலில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன், சிறையில் கொடுத்த சாப்பாடு வீட்டு சாப்பாட்டை விட சூப்பராக இருந்தது. அதனால் மீண்டும் சிறைக்கு போக ஆசைப்பட்டுதான் நான் பைக்கை திருடினேன் என கூறியுள்ளார். ஞானபிரகாசத்திடம் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று தாம்பரம் போலீஸார் அறிவுரை கூறி சிறையில் அடைத்துள்ளனர்.