ஜெயில்லயே இருக்கேன்… அதிர்ச்சி தந்த சசிகலா! உற்சாகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்கள்

 

ஜெயில்லயே இருக்கேன்… அதிர்ச்சி தந்த சசிகலா! உற்சாகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தான் வெளியே வந்தால் மேலும் பல வழக்குகளின் கீழ் கைது செய்து அலைக்கழிக்க வாய்ப்புள்ளதால் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாமல் சிறையிலேயே இருக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்தாதபட்சத்தில் கூடுதலாக 6 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.

sasikala 78

சசிகலா சிறைக்கு சென்று மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தபோது சிறையிலிருந்தது, நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களை காட்டி விரைவில் சசிகலா விடுதலையாவார் என்று கூறப்பட்டது. ஆனால், 10 கோடி ரூபாய் அபராதத்தை இதுவரை அவர் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. வெளியே வந்தால் தன்மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையைக் கொண்டு அலைக்கழிக்கப் பா.ஜ.க திட்டமிட்டு வருவதை சசிகலா உணர்ந்துள்ளார். இதனால் ரூ.10 கோடி கட்ட வேண்டாம் என்று சசிகலா கூறிவிட்டாராம். சிறையில் இருப்பதுதான் கட்சிக்கும், தனக்கும் நல்லது என்று சசிகலா கருதுகிறாராம். 

eps-and-ops

சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க-வுக்குள் தலைமை சண்டை வரும் என்று கருதப்படுகிறது. இப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஒவ்வொருவராக சசிகலாவிடம் சரணடைந்து வருகின்றனர். அவர் வெளியே வந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு வழி செய்துவிடுவார்… இதனால் எடப்பாடி பழனிசாமியே கூட சசிகலா பக்கம் சென்றுவிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க தலைமை பா.ஜ.க-வுக்கு இது பற்றி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. பா.ஜ.க தன்னிடம் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை விட்டு சசிகலாவிடம் விசாரணை நடத்தியது. 
தற்போது வெளியே வர விரும்பவில்லை என்று சசிகலா முடிவு செய்திருப்பது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அ.ம.மு.க மூத்த தலைவர்கள் சிலரும் நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.