“ஜெயிலுக்குள்ளேயும் அதுங்க வந்துடுச்சி வாங்க ஓடிடலாம் “கொரானாவுக்கு பயந்து சிறையிலிருந்து தப்பிய கைதிகள்.. 

ஈரானின் குர்திஸ்தான் மாகாண சிறையிலிருந்து குறைந்தது 80 கைதிகள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் ஒன்றாகும், மொத்த நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 32,332 ஐ எட்டியுள்ளது, இதில் 2,378 பேர் இறந்தனர்.

இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து மார்ச் 19 அன்று, லோரெஸ்தான் மாகாணத்தின் தலைநகரான கோர்ராமாபாத் நகரில் உள்ள சிறைச்சாலையிலிருந்து குறைந்தது 20 கைதிகள் தப்பினர்.வெள்ளிக்கிழமை சாகேஸ் சிறையினை உடைத்து மேலும் பல கைதிகள் தப்பினர் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக ஈரானின் நீதித்துறை ஏற்கனவே 85,000 கைதிகளை விடுவித்துள்ளது.