ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு! 

ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு! 

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய இடங்களில் ஜெயின் மெட்டல் ரோலிங் மில்ஸ் ஆலைகள் செயல்படுகின்றன. அந்த ஆலையில் காப்பர் சுருள் மற்றும் மெட்டல் இறக்குமதி  செய்து வருகின்றனர். கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்த  நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட வருமானத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ITRaid

பல கோடி காப்பர் கம்பி வர்த்தக பரிவர்த்தனையில் இந்நிறுவனம் பல்வேறு வரி ஏய்ப்பு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக சென்னை வருமான வரி துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் ஜெயின் மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.