ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் விஜய் 

 

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் விஜய் 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில்  ‘தலைவி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரை ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இந்த படம் ஜெயலலிதா அவர்களின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்றுப் படம் .ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக் அவர்களிடம் இருந்து NOC- யை பெற்று இந்த படத்தை உருவாக்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்,”தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் “தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளைப் பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களைப் பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது.

அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்றுப் படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்குக் கூடுதல் மதிப்பை சேர்க்கும். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.