ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு 2 ஆசைகள் இருந்தன என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருச்சி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு 2 ஆசைகள் இருந்தன என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தம்பிதுரையின் பேச்சு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதல்வருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து தம்பிதுரை அதிமுகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைவார் இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்க போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்குமளவுக்கு எனக்கு தகுதி இல்லை என தம்பிதுரை கூறினார்.

இந்நிலையில், தம்பிதுரை குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும். முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்வராக ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பாஜக மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் பாஜகவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பாஜக அமைச்சர்களுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்றார்.