ஜெயலலிதா பெயரில் நடந்த மோசடி -கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக நடந்த கொள்ளை …

 

ஜெயலலிதா பெயரில் நடந்த மோசடி -கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக நடந்த கொள்ளை …

தமிழக முதலவர் ஜெயலலிதாவின் கருப்பு பணம் 2000 கோடி இருப்பதாகவும் அதை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் நம்ப வைத்து 5லட்ச ரூபாய் மோசடி செய்தனர்.

சென்னையை சேர்ந்த  இஸ்மாயில், அஸ்லம், சலீம் மற்றும் ஆரிப்,ஆகியோர்  ஒன்று சேர்ந்து  கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த ஹபீப் என்ற 42 வயது நபரை தங்களிடம் முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் கருப்பு பணம் 2000 கோடி இருப்பதாகவும் அதை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் நம்ப வைத்து 5லட்ச ரூபாய் மோசடி செய்தனர்.

kolar

பெங்களூரு அருகே கோலார் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான ஹபீப் ,இவரிடம் சென்ற வாரம் சென்னையை சேர்ந்த  இஸ்மாயில், அஸ்லம், சலீம் மற்றும் ஆரிப்,ஆகியோர் தொடர்பு கொண்டு தங்களிடம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருப்பு பணம் 2000 கோடி இருப்பதாகவும் .அதை வெள்ளையாக மாற்ற  தாங்கள் 2000 ரூபாய் நோட்டாக 30 லட்சம் கொடுத்தால் நாங்கள் அதற்கு 500 ரூபாய் நோட்டாக 1 கோடி தருகிறோம் என்று கூறினார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய ஹபீப் அவர்களிடம் 5 லட்ச ரூபாய் 2000 ரூபாய் நோட்டாக தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர்கள் காரில் 1 கோடி ரூபாய் இருக்கிறது எடுத்து வந்து தருகிறோம் என்று கூறி 5 லட்ச ரூபாயோடு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் திரும்பி வராதததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹபீப் போலீசில் புகார் தந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .