‘ஜெயலலிதா பயோபிக்’ : காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்கும் கங்கனா

 

‘ஜெயலலிதா பயோபிக்’ : காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்கும் கங்கனா

ஜெயலலிதா போல உருவத்தை மாற்ற லுக் டெஸ்ட் எடுக்க தலைவி படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது.

ஜெயலலிதா பயோபிக்   நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் பரதநாட்டியம் கற்று வருகிறார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.

jayalalitha

 தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்.  இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சமீபத்தில் ஜெயலலிதா போல உருவத்தை மாற்ற லுக் டெஸ்ட் எடுக்க தலைவி படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது.

kangana

இந்நிலையில் ஜெயலலிதா பரதநாட்டிய கலைஞர் என்பதால், நடிகை கங்கனாவும்  படத்துக்காகப் பரதநாட்டியம் கற்று வருகிறார். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராமிடம் அவர்  பரதநாட்டியம் கற்று வருகிறார்.

 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி, அர்ப்பணிப்பும் , தன்னடக்கமும் கொண்ட சிறந்த நடிகை. உண்மையான கலைஞர். மொத்தத்தில் அவரை வேற லெவல்’ பதிவிட்டுள்ளார். இந்த  புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

jayalalitha

தலைவி படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தலைவி  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது  குறிப்பிடத்தக்கது.