ஜெயலலிதா பயோபிக் : எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

 

ஜெயலலிதா பயோபிக் : எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

ஜெயலலிதா பயோபிக்  படத்தில் எம்ஜிஆராக நடிப்பது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா பயோபிக்  படத்தில் எம்ஜிஆராக நடிப்பது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 

kangana

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். 

aravind

இந்நிலையில் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

 

kanagana

சமீபத்தில் ஜெயலலிதா போல உருவத்தை மாற்ற லுக் டெஸ்ட் எடுக்க தலைவி படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது குறிப்பிடத்தக்கது.