ஜெயலலிதா படத்துடன் ஸ்டாலினிடம் கண்ணீர் வடித்த அதிமுக தொண்டர்கள்! – வீடியோவை பாருங்கள்

 

ஜெயலலிதா படத்துடன் ஸ்டாலினிடம் கண்ணீர் வடித்த அதிமுக தொண்டர்கள்! – வீடியோவை பாருங்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகப்பட்டினம்: கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலைய செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சேதங்களை பார்வியட வரும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் நகர் புரங்களை மட்டுமே பார்வையிட்டு செல்வதாகவும், உள் கிராமங்களுக்கு எந்த நிவாரணமும் வந்தடைவதில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆதரவு கூறுவதற்காக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், நேற்று நாகப்பட்டினம் வந்திருந்தார்.

அப்போது, ஸ்டாலின் சென்ற வாகனத்தை இடைமறித்த அதிமுக தொண்டர்கள், தங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் முழுமையாக வந்தடையவில்லை என்றும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், உட்பட யாரும் இதுவரை வரவில்லை என்று ஸ்டாலினிடம் கதறி அழுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.