‘ஜெயலலிதா நினைவிடம் மார்ச்சில் திறக்கப்படும்’ – தமிழக அரசு தகவல்

 

‘ஜெயலலிதா நினைவிடம் மார்ச்சில் திறக்கப்படும்’ – தமிழக அரசு தகவல்

மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம், வருகின்ற மார்ச் மாதம் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம், வருகின்ற மார்ச் மாதம் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர் மறைந்ததையடுத்து, அவரின் உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு பின்னால் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவிற்கு 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை தடை செய்ய உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

jaya

இந்நிலையில், இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையில், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நினைவிடம் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

அதனையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.