ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

 

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகமெங்கும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன. சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணாசாலையில் இருக்கும் அண்ணா சிலையில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம் வழியாக கறுப்பு சட்டை அணிந்தபடிபேரணியாக சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மெரினாவில் அமைந்திருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

அதன் பிறகு ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில், மாநில சுயாட்சியை காப்போம் எனவும், சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதனை ஜெயலலிதாவுக்கு காணிக்கை ஆக்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் வாசிக்க அதனை பின்பற்றி முதல்வர், அமைச்சர்கள் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.