ஜெயலலிதா, கருணாநிதி இல்லைனாலும் நாங்க தான் மாஸ் – கடம்பூர் ராஜூ

 

ஜெயலலிதா, கருணாநிதி இல்லைனாலும் நாங்க தான் மாஸ் – கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி அருகேயுள்ள தாப்பாத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ ஆய்வு செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்பட்டியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 27 திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பசுமைவீடு திட்டமும் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழகத்திலேயே முதன்முறையாக அவர்கள் வசிக்கின்ற இடத்திலேயே தொழில் தொடங்குவதற்கு அவர்கள் பேரிலே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்படுகிறது.

K Raju

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு தலைவர்கள் இல்லாத நிலையில்தான் தேர்தலை நாங்கள் சந்தித்தோம்.நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய மினி பொது தேர்தலாக பார்க்கப்பட்டது. ஒன்பது இடங்களில் எங்களை வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சியை தொடரும் நிலையை தமிழக வாக்காளர்கள் உருவாக்கியுள்ளனர்.இங்கு வெற்றிடம் என்பது ஒன்று இல்லை. என்றைக்குமே தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்பதை மக்களே தீர்மானித்து இருக்கிறார்கள். சீமான் கற்பனையில் யாரை வேண்டுமானாலும் அரசியலுக்கு அழைக்கலாம். கற்பனைக்கு கட்டுப்பாடு என்பது கிடையாது” என்று கூறினார்.