ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த அறிவிப்பு விளம்பரத்தை வெளியிட்ட தமிழக அரசு!

ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த அறிவிப்பு விளம்பரத்தை வெளியிட்ட தமிழக அரசு!

ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vedha-illam-789

சென்னை கலெக்டர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியிருப்பதாவது, “பொது நோக்கத்திற்காக ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தினை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நில எடுப்பு செய்வது அவசியம் என தீர்மானித்து அரசு இதனால் அறிவிப்பு வெளியிடுகிறது. இந்த நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்துவதோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை. எனவே, மறுகுடியமர்விற்கும் மறுவாழ்விற்குமான மாற்றிடம் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த நில எடுப்பு நிலங்களின் வரைபடங்கள் நில எடுப்பு அலுவலர் அல்லது கிண்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்” என்று கூறப்பட்டுள்ளது.