ஜெயலலிதா இறந்து 1000 நாட்கள் நிறைவு! வெளிநாடு சுற்றும் அதிமுக தலைவர்கள்!!

 

ஜெயலலிதா இறந்து 1000 நாட்கள் நிறைவு! வெளிநாடு சுற்றும் அதிமுக தலைவர்கள்!!

மக்களால் நான்… மக்களுக்கான நான்… என கர்ஜித்துக்கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஆயிரமாவது நாள் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மக்களால் நான்… மக்களுக்கான நான்… என கர்ஜித்துக்கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஆயிரமாவது நாள் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு அதிமுகவினரிடையே இன்றளவும் சோகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் சூழலும், அதிமுகவின் சூழலும் காணாத காட்சிகள கண்டு வருகின்றன.

Jayalalithaa

முதலில் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் பிறகு எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்தார். அதன் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் கட்சியைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறுகிறார்.. டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். 

தமிழக அரசியலில் ஜெயலலிதாவினால் ஏற்பட்ட வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாத ஒன்று.  சொல்லப்போனால் தமிழக அரசியலை ஜெ.இறப்புக்கு முன், ஜெ. இறப்புக்கு பின் என பிரிக்கலாம். போயஸ் கார்டனில் தொடங்கிய  கூட்டம், அப்பல்லோ, சென்னை மெரினாவில் சென்று முடிவடைந்த இந்நாள் இமயம் சரிந்த நாளாகவே பார்க்கப்படுகிறது.

இன்றைய நாளில் ஜெயலலிதாவை கண்டுக்கொள்ளாத அதிமுக அமைச்சர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.