ஜெயலலிதா ஆட்சியை விட மோசமானது எடப்பாடி ஆட்சி: மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

 

ஜெயலலிதா ஆட்சியை விட மோசமானது  எடப்பாடி ஆட்சி: மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தஞ்சை : ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சசிகலா சிறைக்குச் சென்றதால் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறையை தனது கையில் வைத்துக் கொண்டு 3,000 கோடி  ரூபாய் வரை உறவினர்களுக்கு டென்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவிலேயே பதவியில் இருக்கும் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமி மீதுதான். முதலமைச்சர் மீது மட்டுமல்ல துணைமுதல்வர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் மீதும் சிபிஐ விசாரணை வரும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வசைபாடியுள்ளார்.