ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா; சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

 

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா; சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார்.

#jayalalithaa #mgr #admk