ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள்.. 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்!

 

ஜெயலலிதாவின் 72 ஆவது  பிறந்தநாள்.. 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்!

பல பகுதிகளில் ஜெயலலிதாவின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஜெயலலிதாவின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஏற்கனவே அறிவித்ததன் படி, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ttn

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 72 லட்சம் மரக்கன்றுகள் தமிழக அரசு சார்பில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனை இன்று சென்னை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, மரம் நடும் நிகழ்வை முதல்வர் துவங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.