ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்த செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோடம்பாக்கத்தில் பலரும் இயக்க முனைந்துள்ளனர். இயக்குனர் ஏஎல் விஜய் ‘தலைவி’ எனும் பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் தமிழக முன்னாள் முதல்வரும், நடிகருமான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகின்றனர். 

thalaivi

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து யாரும் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்க கோரி உரிமையியல் வழக்கு தொடர்வதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கோரியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்வதற்கு தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.