ஜெயலலிதாவின் புதிய சிலை அதிமுக தலைமை அலுவகத்தில் திறப்பு

 

ஜெயலலிதாவின் புதிய சிலை அதிமுக தலைமை அலுவகத்தில் திறப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய உருவச்சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய உருவச்சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது 7 அடி உயர வெண்கல சிலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர்-ன் சிலை அருகே திறக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை பிரசாத் என்பவர் வடிவமைத்திருந்தார்.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாததத்தில் அவரது வெண்கல சிலையை திறந்து வைத்தனர். ஆனால் ஜெயலலிதாவின் சிலை அவரை போல் இல்லையென்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அதிமுக தொண்டர்களே ஜெயலலிதா சிலையைப் பார்த்து முகம் சுழிக்கும் அளவிற்கு அது வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவின் சிலையை திறப்பதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சிலையை திறந்திருப்பதாகவும், சசிகலாவின் சிலையை திறந்துள்ளதாகவும், தயவுசெய்து சிலையில் ஜெயலலிதா என எழுதி ஒட்டவும் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவின் புதிய புதிய சிலையை நிறுவ அக்கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, புதிய சிலை உருவாக்கும் பணிகள் ஆந்திராவை சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கபப்ட்டு பணிகள் நடைபெற்று வட்ன்கன.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய உருவச்சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.