ஜெயம் ரவியுடன் நேருக்கு நேராக மோதும் சமந்தா

 

ஜெயம் ரவியுடன் நேருக்கு நேராக மோதும் சமந்தா

சமந்தா நடித்துள்ள ஓ பேபி திரைப்படம் தமிழில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவியுடன் நேருக்கு நேராக மோதும் சமந்தா

சென்னை: சமந்தா நடித்துள்ள ஓ பேபி திரைப்படம் தமிழில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மிஸ் கிராணி படத்தின் ரீமேக்காக தெலுங்கில் வெளியான படம் ஓ பேபி. 70 வயது பாட்டி குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடும் சமயத்தில் போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்ற பொது மந்திர சக்தி மூலம் 24 வயது இளம் பெண்ணாக மாறி அதில் வரும் சிக்கல்களை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும் வயதான தோற்றத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமியும் நடித்துள்ளார்.

மிக பிரமாண்டமாக வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சமந்தாவிற்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

மேலும் அதே நாளில் தான் ஜெயம் ரவியின் கோமாளி படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு போல் தமிழிலும் வெற்றியடையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.