ஜெயக்குமார் அப்பாவான விவகாரம்: மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டியேடா பாடி சோடா மொமன்ட்

 

ஜெயக்குமார் அப்பாவான விவகாரம்: மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டியேடா பாடி சோடா மொமன்ட்

அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை போலி என நிரூபிக்கும் முயற்சியில் அமைச்சரின் ஆதரவாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை போலி என நிரூபிக்கும் முயற்சியில் அமைச்சரின் ஆதரவாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். அதேசமயம், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை போலி என நிரூபிக்க ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஜெயக்குமார் ரசிகர்கள் என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் கணக்கில், அமைச்சர் ஜெயக்குமார் பெயருடன் உலா வரும் பிறப்பு சான்றிதழில் அவரது பெயரை நீக்கி விட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேலின் பெயரை சேர்த்து போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை கூட குழந்தையின் அப்பா பெயராக குறிப்பிட்டு போட்டோஷாப் செய்து வெளியிடலாம் எனவே, இது போலியான ஒன்று என குறிப்பிட்டுள்ளனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், வடிவேலு காமெடி போல் இத்தன கெட்டப் போட்டும், மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டியேடா பாடி சோடா  என்பது போல், சான்றிதழில் உள்ள QR code இவர்களை அம்பலப்படுத்தி விட்டது. அந்த QR code-யை ஸ்கேன் செய்து பார்த்தால், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் இணையதள பக்கத்துக்கு செல்கிறது. அதில் உள்ள தகவலின் படி, குழந்தையின் அப்பா பெயர் இருக்கும் இடத்தில் டி.ஜெயக்குமாரின் பெயரே உள்ளது.