ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமரா அறிமுகம்

 

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமரா அறிமுகம்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் பயன்படுத்தக் கூடிய வகையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமராவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3599 என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேன், வைஃபை, ஹாட்ஸ்பாட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களுடன் மைக்ரோ எஸ்.டி கார்டு போர்ட்டும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 512 ஜிபி மெமரி வரை பயன்படுத்த முடியும். மேலும் மேலும் கீழாக, வலது இடது புறமாக திரும்பும் வசதி, டிஜிட்டல் ஸூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற சிறப்பம்சங்கள் இந்த கேமராவில் இடம்பெற்றுள்ளன.

இந்த சாதனத்தை சுவற்றில் மாட்டிக் கொள்ளலாம் அல்லது மேஜை மீது வைத்து பயன்படுத்த முடியும். இந்தக் கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்குவதற்கு என்று கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து MIPC என்ற மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் வீட்டை கண்காணிக்க முடியும்.