ஜென்ம பகையோடு பாமக- தேமுதிக… தேர்தல் ரிசல்ட் நாளன்று இருக்கிறது கச்சேரி..!

 

ஜென்ம பகையோடு பாமக- தேமுதிக…  தேர்தல் ரிசல்ட் நாளன்று இருக்கிறது கச்சேரி..!

பாமகவும், தேமுதிகவும் ஒருவர் மீது ஒருவராக சந்தேகப்பார்வையை பதித்து வருகிறது. அரசியலில் ஏழு ஜென்ம பகை என்கிற ஒற்றை வார்த்தைக்கு இப்போது வரை எடுத்துக் காட்டாக திகழ்கிறது பாமக. தேமுதிக.

பாமகவும், தேமுதிகவும் ஒருவர் மீது ஒருவராக சந்தேகப்பார்வையை பதித்து வருகிறது. அரசியலில் ஏழு ஜென்ம பகை என்கிற ஒற்றை வார்த்தைக்கு இப்போது வரை எடுத்துக் காட்டாக திகழ்கிறது பாமக. தேமுதிக. 

ஒரே கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இருகட்சிகளும் ஒருவருக்கொருவர் பங்கம் வரும் அளவுக்கு உள்ளுக்குள் பகையை வளர்த்து வருகிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் விஜயகாந்த் கட்சி நம்மளை கவிழ்த்து விட்டதே என பாமகவும், ராமதாஸ் அணியினர் தேமுதிக கழுத்தறித்து விட்டதாகவும் மாறி மாறி குற்றசம்சாட்டு உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தன.ராமதாஸ்

அதே போல கடந்த கால கசப்பான அனுபவங்களை முன்னிறுத்தி, தேர்தலில் சட்டசபை தொகுதியாகவும் மற்றும் வார்டு வாரியாகவும் பதிவான வாக்குகளை ஆட்களை வைத்து அலசி ஆராய்ந்து இரு கட்சியினரும் தனித்தனியே ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள்.ராமதாஸ்அதில் எதிர்கட்சிகள் பலமாக  உள்ள பகுதிகளில் அதிக ஓட்டும்,  ஆளுங்கட்சி கூட்டணி செல்வாக்குள்ள பகுதிகளில் குறைவான வாக்கும் பதிவாகி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.  அதிக ஓட்டு விழுந்த இடத்தில் கூட்டணி கட்சி எதிர்கட்சிக்கு ஓட்டுபோட்டுட்டாங்களோ என்றும் குறைவாக ஓட்டு விழுந்த இடத்தில் நம்ம கட்சியை புறக்கணித்து ஓட்டு போடாமல் விட்டுவிட்டார்களோ என்றும் ஒருவர் மேல் ஒருவருக்கு சந்தேகத்தை கிளம்ப்பி வருகின்றனர். ராமதாஸ்

அதனால் வாக்கு பதிவு விவரங்களை வைத்து தங்கள் பூத் ஏஜென்டுகளில் விசாரித்துள்ளார்கள். அவர்களும் தலைமைக்கு கோபம் வரக்கூடாது என்று 60 சதவீதத்துக்கும் மேல நமது ஓட்டுதான் விழுந்து இருக்கிறது. கவலைப்படாதீங்க என்று பதிலை சொல்லி விட்டு தேமுதிக – பாமகபிடம் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள். இரு தரப்பும் வாக்கு எண்ணிக்கை நாள் வரை திக் திக் பரபரப்பில் தங்களது அடிபொடிகளிடம் புலம்பி வருகிறார்கள்.