‘ஜென்மத்துக்கு தாமரை மலரவே மலராது’ – வைரலாகும் குபீர் வீடியோ!

 

‘ஜென்மத்துக்கு தாமரை மலரவே மலராது’ – வைரலாகும் குபீர் வீடியோ!

தன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த தாமரை கோலத்தை இளைஞர் ஒருவர் அழிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த தாமரை கோலத்தை இளைஞர் ஒருவர் அழிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொள்ளும் கூட்டங்களில் எதை பேசுகிறாரோ இல்லையோ, மறக்காமல் கூட்டம் முடியும் போது தன் கைகளை உயர்த்தி, “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.. தாமரை மலர்ந்தே தீரும்!” என்ற வசனத்தை மட்டும் உச்சரிக்க தவறியதே இல்லை. 

இவர் ஒரு புறம் இப்படி சபதம் ஏற்றுக் கொண்டிருக்க, நமது நெட்டிசன்களோ, ‘தாமரை எப்படி மலரும் என்பதை பார்ப்போம் என்றும், தாமரை மலர வாய்ப்பே இல்லை’ என்றும் ஏடாகூடமாகப் பதிவுகளை போட்டு தமிழிசையை வெறுப்பேற்றுவதுமாக சமூகவலைதளங்களில் ‘தாமரை’ பற்றிய டாக் எப்போதுமே ஹாட் டாபிக் தான். 

அந்த வகையில், தன் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த தாமரை கோலத்தை வேக வேகமாக அழித்த இளைஞர் ஒருவர், இனி தாமரை கோலத்தைப் போடாதீர்கள், ‘ஜென்மத்துக்கு தாமரை மலரவே மலராது’ என தன் அம்மாவிடம் கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வருடத்தின் முதல் நாளான இன்று, கண்டெண்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு, புத்தாண்டு பரிசாக வந்து விழுந்துள்ளது ‘தாமரை’.. மலர்ந்த மாதிரி தான்!