ஜெனீவா ஒப்பந்தம் என்ன சொல்கிறது; அபிநந்தன் அதன்படி நடத்தப்படுகிறாரா?

 

ஜெனீவா ஒப்பந்தம் என்ன சொல்கிறது; அபிநந்தன் அதன்படி நடத்தப்படுகிறாரா?

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ரானுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாகிஸ்தான் அரசாங்கம் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி நடத்துகிறதா, ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன என்பது பற்றி சில தகவல்கள்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ரானுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாகிஸ்தான் அரசாங்கம் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி நடத்துகிறதா, ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன என்பது பற்றி சில தகவல்கள்.

ஜெனீவா ஒப்பந்தம் என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இதில், போர்களின் போது வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எதிரி நாட்டு படையால் கைது செய்யப்பட்டால், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனீவா ஒப்பந்தத்தில் இரண்டாம் உலக போருக்குப்பின் 1949-ஆம் ஆண்டு, போர் கைதிகள் நடத்தை விதிகள் கொண்டு வரப்பட்டது. பின் 1977 மற்றும் 2005 -ஆம் ஆண்டுகளில் மேலும் சில விதிகள் உருவாக்கப்பட்டன.

காயம்பட்ட வீரர் மீது இனம், நிறம், மதம், பாலினம் ரீதியாக தாக்கப்படக்கூடாது. அவரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தக்கூடாது. உரிய மருத்துவ வசதிகள் செய்ய வேண்டும்.

அவர்களின் உணவு, இருப்பிடம், உடை, சுகாதாரம் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர்களை காயப்படுத்தக்கூடாது, தன்மானத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும்.

முறைப்படி நிறுவப்படாத நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது.

சிறைபிடிக்கப்பட்ட வீரரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அவரது நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

போர்க் கைதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்களை அச்சுறுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு உடன்படிக்கைகளை கொண்டது ஜெனீவா ஒப்பந்தம்.

பாகிஸ்தான் குண்டர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்ட அந்நாட்டு ராணுவம், அவரை இதுவரை ஒழுங்காகதான் நடத்தி வருகிறது. இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவரை பத்திரமாக ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அபிநந்தனை வீடியோ எடுத்தது ஜெனீவா ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று கூறப்பட்டாலும், அவர் பத்திரமாக இருப்பதை நாட்டு மக்களுக்கு உறுதிபடுத்தியது பதட்ட நிலையை குறைத்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அரசாங்கம் வெகு விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி அபிநந்தனை மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.