ஜெட் வேகத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய் சேதுபதி 

 

ஜெட் வேகத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய் சேதுபதி 

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். 

சென்னை: விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். 

‘பேராண்மை’, புறம்போக்கு எனும் பொதுவுடைமை படங்களைத் தந்து தேசிய விருது வென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

vj

இதை 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறு முககுமார் தயாரித்து வருகிறார். இதில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின்  படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி மதுரை, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்றது. 

இந்த நிலையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசி, மதுரை போன்ற ஊர்களில் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். 

மேலும் ஸ்ருதி ஹாசன் ‘சிங்கம் 3’ படத்திற்குப் பின் சிறிய இடைவெளிவிட்டு ‘லாபம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.