‘ஜெட்லிக்கு நேரில் அஞ்சலி செலுத்தாது என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்’ : மோடி உருக்கம்!

 

‘ஜெட்லிக்கு நேரில் அஞ்சலி செலுத்தாது என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்’ : மோடி உருக்கம்!

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்

புதுடெல்லி:  தனது நெருங்கிய நண்பரான ஜெட்லிக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாதது தன் மனதில் என்றும் நீங்காத வடுவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

arun

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததோடு,நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவரால் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய மோடி, கடந்த ஆகஸ்ட்  மாதம் 27 ஆம் தேதி  அருண் ஜெட்லியின் இல்லத்திற்குச் சென்று  ஆறுதல் கூறினார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.

modi

இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய மோடி, ‘நானும் ஜெட்லியும் நீண்ட கால நண்பர்கள். என் நண்பருக்கு நான் அஞ்சலி செலுத்துவேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை. அவரின் இறுதி சடங்கிற்கு என்னால்  வர முடியாதது என் மனதில் எப்போதும் நீங்காத வடுவாக இருக்கும்’ என்று உருக்கமாகத் தெரிவித்தார்.